யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தடுப்பூசி செலுத்திய அட்டைகளை கைவசம் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனை யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சிறீ. பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்க்க வருபவர்கள் தடுப்பூசி ஏற்றிய அட்டைகளை கொண்டு வருவது கட்டாயமாகும்.
யாழில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களாவர்.
யாழில் கொரோனா அபாயம் அதிகரித்துள்ளது.
கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவும் நிரம்பியுள்ளது.
அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதன் ஊடாக கொரோனா தொற்று சமூகத்தின் பரவுவதை வெகுவாக குறைப்பதோடு, உயிரிழப்புக்களையும் குறைத்துக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.