128 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த திலினி பிரியமாலி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

<!–

128 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த திலினி பிரியமாலி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் – Athavan News

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி 128 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அவர் மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இதனை தெரிவித்தார்.

தனக்கு எதிராக கிடைக்கப்பெற்ற 12 முறைப்பாடுகள் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.


Leave a Reply