சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்களிற்கான புலமைப்பரிசில் வழங்கல்!(படங்கள் இணைப்பு)

வவுனியாவில் சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்களிற்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (27) இடம்பெற்றது.

இதன்போது  மாணவர்களிற்கு புலமைப்பரிசில் வழங்கியதோடு, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கான கௌரவிப்பும் இடம்பெற்றிருந்தது.

மேலும் இத்திட்டத்தினை மாணவர்களிடையே கொண்டு சென்ற உத்தியோகத்தர்களிற்குமான கௌரவிப்பும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் சரத்சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர்  மங்களேஸ்வரன், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், வடக்கு கிழக்கு மாகாண சமூக பாதுகாப்பு சபையின் சிரேஸ்ட இணைப்பு அதிகாரி பிரதீபன் மற்றும் அரச உயர் அதிகாரிகள், அலுவலகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

பிற செய்திகள்

Leave a Reply