
அதிபர் மாளிகையில் இருக்கும் உடைந்து போன தொலைக்காட்சி மற்றும் ஊடகப்பிரிவில் இருந்த புகைப்பட கருவிகள் உட்பட பொருட்களை எடுத்துச் செல்லும் அளவுக்கு தான் தாழ்ந்த நிலைக்கு சென்றவன் அல்ல என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிபிவ் கலந்து கொண்டு கருத்து தெரிவக்கையிலேஅவர் இதனைத் தெரிவித்தார்.
அதிபர் செயலகத்தில் இருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் காணாமல் போயிருப்பதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நான் அந்த கணக்காய்வு அறிக்கையை பார்க்கவில்லை.
அதிபரின் ஊடகப்பிரிவு மற்றும் அதிபர் செயலகத்தில் உள்ள பொருட்கள் எதுவும் அதிபருக்கு சொந்தமானது அல்ல. அவற்றுக்கு பொறுப்பான அதிகாரிகள் இருக்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டார்.