பாணின் நிறை குறைய காரணம் என்ன? – வெளியான தகவல்

கோதுமை மா மற்றும் ஏனைய பொருட்களின் அதிக விலை மற்றும் அவற்றின் தட்டுப்பாடு காரணமாக சில பேக்கரி உரிமையாளர்கள் குறைந்த நிறை கொண்ட பாணை உற்பத்தி செய்ய தூண்டப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

குறைந்த நிறை கொண்ட பாண்கள் மீதான சோதனைகள் பிரச்சினைக்கு தீர்வாகாது என்றாலும், பேக்கரி உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு கிடைக்கும் வரை, இந்த பிரச்சினை தொடர்ந்து இருக்கும் என்று அவர் கூறினார்.

கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை சுமார் 300% அதிகரித்துள்ளதாகவும், இந்த விலை அதிகரிப்பின் காரணமாக பாணை உற்பத்தி செய்ய முடியாமல் ஏற்கனவே 2000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் ஜயவர்தன தெரிவித்தார்.

கோதுமை மா மற்றும் ஏனைய பொருட்களின் விலை உயர்வால் 400 கிராம் பாணின் விலையை 190 முதல் 200 ரூபா வரை உயர்த்தியும் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சில பேக்கரி உரிமையாளர்கள் குறைந்த நிறை கொண்ட பாணை உற்பத்தி செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply