கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்

<!–

கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் – Athavan News

மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 98வது நாளான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகிறது.

நில அபகரிப்பு ,தொல்லியல் என்ற பெயரில் வனஇலா காணிகளை சுவீகரிப்பு போன்ற விடயங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 100 நாள் போராட்டத்தை வலியுறுத்தி இவ் போராட்டம முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply