சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்க கோரி நுவரெலியாவில் போராட்டம்!

1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப் பத்திரத்தை வழங்குமாறு கோரி நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினர், சில சிவில் அமைப்புகள் இணைந்து, நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

எமக்கு வேண்டும் தனி வீடுகள், 37000 ஆயிரம் வீடுகளுக்கு உறுதிபத்திரம் வழங்கு, தோட்ட தொழிலாளர் இந்த நாட்டின் பிரஜைகள் என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 1987 ஆம் ஆண்டின் பின்னர் பெருந்தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் ஒன்றில் கையொப்பங்கள் திரட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

Leave a Reply