பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் தலையிட வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு உள்ளதாக சட்டத்தரணி ஆனந்த அமர்நாத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னியில் உள்ள வேவர்லி நீதிமன்றம் மீண்டும் பிணை வழங்க மறுத்ததையடுத்து நேற்று (7) சிட்னியில் உள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார்.
இதனிடையே, விசாரணை முடியும் வரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தனிஷ்க குணதிலக்கவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆனந்த அமர்நாத், எமது செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் தலையிட வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு உள்ளதாக கூறினார்.

