திங்கள் வரை வடக்கில் மழை தொடரும் – தாழ் அமுக்கம் புயலாக மாறலாம் என எச்சரிக்கை

எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் வடக்கு மாகாணத்தில் மழை தொடரும் என்றும்,வங்களா விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் மற்றும் அதன் நகர்வு தொடர்பில் நாளையே உறுதியாகக் கூறமுடியும் எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்தார்.

மத்திய வங்காள விரிகுடாவில் இன்று இரவு தாழமுக்கம் ஒன்றின் ஆரம்ப நிலை உருவாகும். நாளை அது வலுப்பெறும். இத னால் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் தொடர்ச்சியாக கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும்.

தாழமுக்கமானது இலங்கையின் வட பகுதிக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியூடாக கடக்கும். புயலாக இருந்தாலும் சரி அல்லது தாழமுக்கமாக இருந்தாலும் சரி இப்ப குதியூடாகவே கடப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

சரியான பாதையை நாளை உறுதிப்படுத்தி கூறக் கூடியதாக இருக்கும். பெரும்பாலும் இது ஒரு புயலாக இருக்கும் அல்லது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காணப்படும்-என்றார்.

Leave a Reply