பிரபாகரனிடம் இருந்து தாம் தப்பியது எப்படி? – அவர் நல்லவர் – சபையில் சிங்கள எம்.பி புகழாரம்

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில்:

நாட்டின் புலனாய்வுத்துறை தலைகீழாக  செயற்படுகிறது.கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தை நான் தான் ஏற்பாடு செய்தேன் என அவர்கள் அறிக்கை தயார் செய்து இருக்கிறார்கள்.இது தான் நாட்டின் புலனாய்வுத்துறை.கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்பில் நாம் கேள்வி எழுப்பினோம்.வசந்த முதலிகே பயங்கரவாதியா ,நாட்டில் பயங்கரவாதம் உள்ளதா என்று கேட்டோம்.அப்போது அவர்கள் சொன்னார்கள்,இந்த இளைஞர்களை கைது செய்து வைப்பதே நாட்டில் பயங்கரவாதம் உள்ளதா என்று பார்க்கத்தான் என்கிறார்கள்.என்ன இது.யுத்த காலத்தில் கூட இப்படி இருக்கவில்லை.யுத்த காலத்தில் இப்படி இருந்திருந்தால் பிராபகரன் எங்களை பிடித்து தடுத்து வைத்திருப்பார் என்றார்.

Leave a Reply