மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம் சிலாபம் மீன்பிடி துறைமுக எரிபொருள் நிலையம் அண்மையில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
சிலாபம் மீனவ சமூகம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.
இதன் மூலம் மீனவ சமூகம் எரிபொருளை வெளியில் இருந்து பெறுவதற்கான கூடுதல் செலவைக் குறைப்பதுடன், மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு மேலதிக வசதியும் கிடைக்கப் பெறுவது சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,
“சிலாபம் மீனவர் சங்கம் துறைமுகத்தில் மணல் பிரச்சினை தொடர்பில் தன்னுடன் பல தடவைகள் கலந்துரையாடியதாகவும். மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி விரைவில் மணலை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் குழு மற்றும் மீனவ சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










