
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்காக மொறட்டுவைப் பல்கலைக்கழக பொறியியற்பீட தமிழ் மாணவர்களால் 13 வருடங்களாக நடாத்தப்படும் முன்னோடிப்பரீட்சை இவ்வருடமும் 22 மாவட்டங்களை உள்ளடக்கிய 68 பரீட்சை நிலையங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிமூலமாகவும் இடம்பெறவுள்ளது.
பரீட்சைக்கான நிகழ்நிலை விண்ணப்பப்படிவங்கள் நேற்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்காக விண்ணப்பிக்கப்போகும் மாணவர்கள் Mora E-Tamils இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அல்லது Mora Exam Facebook,Twitter,LinkedIn,WhatsApp community இன் உத்தியோகபூர்வ பக்கங்களில் அல்லது கீழே கொடுக்கப்பட்ட இணைப்பினூடாக சென்று நிகழ்நிலை விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் விண்ணப்ப படிவம் நிரப்புவது தொடர்பான காணொளிக்கான இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
Follow the link below to fill the application form(விண்ணப்ப படிவ இணைப்பு):
https://forms.gle/pRiVrGsxwtXAeEsn6
Follow the link below to watch the guidance video(விண்ணப்ப படிவம் நிரப்புவது தொடர்பான காணொளி):
https://youtu.be/mg2DL7uFlfw





