நாட்டில் மனித பாவனைக்குதவாத வாசனை திரவியங்கள் விற்பனை

உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதன பொருள்கள் நாடுமுழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்களை இறக்குமதி செய்வது தொடர்பான சட்டம் முன்பு நடைமுறைப்படுத்தப்படாமையால் இந்தச் செயற்பாடு இடம்பெற்றுள்ளன என தோல் நோய் மருத்துவ நிபுணர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையில் பதிவுசெய்யாமல் உயிருக்கு ஆபத்தான பொருத்தமற்ற பொருள்கள் நாட்டுக்குத்  தருவிக்கப்படுகின்றன.

அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு தோல் நோய்கள் தாக்கும் அபாயமுள்ளது.   துறைசார் அதிகாரசபையின் அங்கீகாரம் பெற்றவையை  மாத்திரமே கொள்வனவு செய்யவேண்டும்.

தற்போது மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வது தொடர்பான சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே நுகர்வோர் தேவையற்ற பல வகையான அழகுசாதனப் பொருள்களைக் கொண்டு சருமத்தை கழுவினால் சருமத்தில் நன்மை பயக்கும் பக்றீரியாக்கள் அழிந்துவிடும் என்பதனை உணரவேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply