மோசடி பெண் திலினி பிரியமாலியின் தந்தை தொடர்பில் வெளியான இரகசியம்!

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்சஅமரசிங்க என ஊடகவியலாளர் கிர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவரது தாயார் குருநாகல் பகுதியில் வசிப்பதாகவும், தற்போது இரண்டாவதாக திருமணம் செய்த கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது திருமணத்தின் கணவர் கொத்தனாராக பணியாற்றுபவர் எனவும் திலினியின் தாய்க்கு அந்த திருமணத்தில் இரண்டு மகன்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் என கூறப்படும் இசுரு பண்டாரவை சந்திக்க பல அரசியல்வாதிகள் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திலினியின் வணிக உதவியாளராகப் பணியாற்றி தற்போது விளக்கமறியலில் உள்ள ஜானகி சிறிவர்தன ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய தோழி என கீர்த்தி ரத்நாயக்க கூறியுள்ளார்.

அவரின் இந்த அறிக்கைகள் பொய்யானால் குற்றப்புலனாய்வு திணைக்களம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்த ஊடகவியலாளர் சமுதிதாவுடனான நேர்காணலில்கீர்த்தி ரத்நாயக்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *