யாழ் நல்லூரில் கண்ணீர்மல்க மாவீரர்களுக்கு அஞ்சலி!

தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றாகும்.

இந்நிலையில் இன்றையதினம் இலங்கை உட்பட  தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக  அமைக்கப்பட்டுள்ள  மாவீரர்களின் நினைவாலயத்திலும் இன்று மாலை 06.05 மணிக்கு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply