கொழும்பு,நவ 30
இன்று நவம்பர் 30 ஆம் திகதி வரை மாத்திரமே மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
மின்தேவை முகாமைத்துவம் தொடர்பில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் அறிக்கையை சுட்டிக்காட்டி ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இன்று (30) வரையில் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு PUCSL அனுமதி வழங்கியுள்ளதாக PUCSL தெரிவித்துள்ளது.
இன்றுடன் மின்வெட்டுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என ரத்நாயக்க குறிப்பிட்டார்.
மேலும், நவம்பர் 25 ஆம் திகதி மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த CEB கோரிக்கையை PUCSL நிராகரித்ததாகவும் அதற்கு பதிலாக இரண்டு மணி நேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் PUCSL தெரிவித்துள்ளது.

