நாட்டின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான எவ்வித உறுதியான நிலைப்பாடும் சிங்கள ஆட்சியாளர்களிடமும் காணப்படவில்லை – சபா.குகதாஸ் குற்றச்சாட்டு!

சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற அமர்வில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,இனப்பிரச்சினைக்கு மாவட்ட சபையை தீர்வாக முன்வைக்கலாம் என்ற வகையில் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவர் கூறியதற்கு சற்று வித்தியாசமாக மாவட்ட அபிவிருத்தி குழுக்களை நியமிக்கலாம் என்றவாறு கூறியிருந்தார்.

இந்த இனப்பிரச்சனைக்கான தீர்வை வழங்குவதற்கு இந்த ஆட்சியாளர்களிடம் ஒரு ஒற்றுமையான நிலைப்பாடு இல்லை .அதேநேரம் தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாகவும் அவர்களின் அபிலாசைகளை தீர்க்கும் முகமாகவும், நாட்டில் ஒரு அமைதியான நிலையை ஏற்படுத்துவதற்கும்   சிங்கள ஆட்சியாளர்கள் தரப்பிலும்,எதிர்க்கட்சி தரப்பிலும் ஒரு உறுதியான நிலைப்பாடு காணப்படவில்லை என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்..

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,சர்வதேச ரீதியான அழுத்தங்களையும்,உள்நாட்டில் இருக்கின்ற பொருளாதார பிரச்சினையை அடிப்படையாக கொண்டு தமிழர் தரப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக்கொண்டு இருக்கிறார். உண்மையில் தமிழ் பேசும் அத்தனை கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு சரியான தீர்க்கமான முடிவை முன்வைக்க வேண்டும். அதாவது வடக்கு,கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையில் நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற கோரிக்கையினை ஜனாதிபதிக்கு முன்வைக்க வேண்டும்.

கடந்த 74 ஆண்டுகளாக நாங்கள் இந்த ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். பல பேச்சுவார்த்தைகளுக்கும் ,வட்டமேசை மாநாடுகளுக்கும்  ,பல ஒப்பந்தங்களுக்கும் சென்று பல ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கிறோம். இது எங்களுக்கு கற்றுக்கொண்ட பாடமாக இருக்கின்றன .ஆகவே இந்த நேரம் சர்வதேச ரீதியிலான அழுத்தங்கள் ,சர்வதேச தேவைகளும் நிறைவேறுவதற்கு காத்திருக்கின்றபடியால் ,இவ்வளவு காலமும் நாங்கள் பட்ட துயரமான வாழ்வுக்குள் எங்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்கு ஒரு சக்தியாக இருப்பது இந்தியா மட்டும் தான்.

தமிழ் பேசும் அனைத்து கட்சிகளும் ,ஏற்றத் தாழ்வுகளை மறந்து ஒற்றுமையாக ஒரு கோரிக்கையினை முன்வைக்க வேண்டும்.சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு நாங்கள் அடிப்படையாக இருக்கிறோம் ,நீங்கள் இதற்கு மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்.இதனால் எண்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் ,என்ற கோரிக்கையினை இந்திய அரசிடம்,தமிழர் தரப்பு முன்வைக்க வேண்டும்.

ஆகவே இதன் மூலம் தான் நாங்கள் தீர்வினை பெற முடியுமே தவிர ,வெறுமனே இந்த பராளுமன்றத்தில் 13 ஆவது திருத்தம்,மாகாணசபைகள் தேவையில்லை,இன்று மாவட்ட சபைகள் இன்று வந்திருக்கிறார்கள், எதிர்காலத்தில்  கிராம மட்ட அபிவிருத்தி என்று பேசுக்கின்ற அளவிற்கு மிக கேவலமான அரசியல் நிலைப்பாடு இலங்கை பாராளுமனறத்திற்கு இந்த சிங்கள கட்சிகளால் முன்வைக்கப்டுகிறது என்பது பாதிக்கப்ட்ட மக்களுக்கு மிக வேதனையாக இருக்கக்கூடிய விடயம்.

ஆகவே இனியும் பொறுமை காக்காது இந்த தமிழ் கடசிகள் ஒற்றுமையான நிலைப்பாடினை எடுக்க வேண்டும் என கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply