கிரிவுல்ல – புஸ்கொலதெனிய பிரதேசத்தில் பொதுசுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி உமிழ்ந்த கொரோனா தொற்றாளர் ஒருவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளர் ஒருவர் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நாரம்பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோகர் பணிக்காக சென்றுள்ளார்.
மேலும் குறித்த சந்தர்ப்பத்தில் அந்த வீட்டில் இருந்த கொரோனா நோயாளர் என சந்தேகிக்கப்படும் நபரின் 48 வயதுடைய தந்தை, பொதுசுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளதுடன் அவரை தாக்கி அவர் மீது உமிழ்ந்துள்ளார்.
அத்தோடு இது தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து காவல்துறை அவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
மேலும் இச் சம்பவத் தினத்தன்று குறித்த நபர் மது போதையில் இருந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.