நீத்தார் நினைதல் -மணிமண்டப முன்னோடி அமரர் தங்கவேல்

04.08.2021 ஒரு மாத நிறைவு. மணிமண்டப முன்னோடி அமரர் தங்கவேல்

காரைதீவைச்சேர்ந்த பிரபல சமுகசேவையாளர் தேசமான்ய, விபுலநேசன் ,லயன் .சின்னதம்பி தங்கவேல் (வயது 75) அவர்கள் கொரோனாவால் மரணித்து இன்றுடன்(4) ஒருமாத காலமாகின்றது. அவர் நினைவாக இப்பதிவு.


மணிமண்டப முன்னோடி தங்கவேல் மாமா!
‘தோன்றிற் புகழோடு தோன்றுக..’ என்ற வள்ளுவன் வாக்கிற்கமைவாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஸ்தாபகஉறுப்பினரான பிரபல சமுகசேவையாளர் தேசமான்ய விபுலநேசன் லயன் சின்னதம்பி தங்கவேல் (வயது 75) சிவபதமடைந்து இன்றுடன்(4) ஒரு மாதகாலமாகின்றது.
சமுகசேவையாளர்களை இத்தருணத்தில் நினைவு கூர்தலின்மூலம் அவரது சேவையை உலகுக்கு எடுத்தியம்புவதோடு மேலும் பல சேவையாளர்களை உருவாக்கலாம் என்பதால் இப்பதிவு .
ஓய்வுநிலைப் பொறியியலாளரான இவர் காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் காப்பாளராகவும்  காரைதீவு இனநல்லிணக்க சமாதானசபையின் தலைவராகவும் ஓய்வூதியர்சங்கத்தின் தலைவராகவும் மத்தியஸ்தசபை உறுப்பினராகவும் மற்றும் பல முன்னணி அமைப்புகளில் பிரதான பாகமெடுத்து சேவையாற்றிவந்தவராவார்.

‘தங்கவேல் மாமா’ என பலராலும் நன்கு அறியப்பட்ட இவர் கல்முனை லயன்ஸ் கழகத்திலும் பலசமுக அமைப்புகளிலும் கந்தசாமிஆலயம் உள்ளிட்ட சமய நிறுவனங்களிலும் முன்னின்று பணியாற்றிவந்தவராவார்.

 காரைதீவு பிரதேச சபை அபிவிருத்தி  குழுவின் ஆலோசகசபை உறுப்பினரான இவர் விவேகானந்த விளையாட்டுக்கழகத்தின் முகாமையhளராவார்.
இ.கி.மிசனையும் சுவாமி விபுலாநந்த அடிகளாரையும் இருகண்கள் போன்று உள்ளன்போடு நேசித்த ஒரு மகான் இன்றில்லை என நினைக்கின்றபோது கவலைதான்.
மூன்றுதசகாப்தகாலம் மணிமண்டப நிருவாகத்தில் நிருவாகசபைஉறுப்பினராக செயலாளராக சீரிய பணியாற்றிவந்த அவர் இறுதியாக காப்பாளராக பணியாற்றிவந்தகாலை இறைவன் அவரை அழைத்துள்ளான்.

காரைதீவில் சுவாமி விபுலாநந்த மணிமண்டப வரலாற்றை எழுதுபவர்கள் அமரர் தங்கவேல் மாமாவின் பெயரைவிடுத்து எழுதமுடியாதளவிற்கு அவரது நீண்டகாலசேவை திகழ்கிறது.

ஆம், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாருக்கு 1969இல் பிரதானவீதியில் சிலை எழுப்பப்பட்ட பிற்பாட 1999இல் அவர் பிறந்த மனை வளாகத்தில் மற்றுமொரு சிலை நிறுவப்பட்டமையை நாமறிவோம். அதற்கு முன்பதாக அவர் ஞாபகார்த்தமாக கம்பீரமாக மணிமண்டபம் என்றொரு கலைமண்டபம் அமைந்துள்ளதையும் அறிவோம்.
இதற்கு கால்கோளிடப்பட்டது 1990வன்செயலுக்குப்பினன்ர் 1991இல்hகும். அடிகளார் பிறந்த இல்லத்தை நினைவாலயமாக மாற்றவேண்டும் என்ற சிந்தனையில் அன்று முன்னாள் அக்கிராசனர் டாக்டர்.மா.பரசுராமன் அவர்கள் தலைமையில் கூடிய குழுவில் நிருவாகசபைஉறுப்பினராக திரு.சி.தங்கவேல் இணைந்துகொண்டார்.
அந்தக்கணத்திலிருந்து மரணிக்கும்வரை சுமார் 30வருடகால சேவை மணிமண்டப விடயங்களிலும் இ.கி.மிசன் பணிகளிலம் மிகவும் அன்னியோன்யமான உறவைப்பேணிவந்தவர். எந்த விழாவென்றாலும் மனங்கோணாது நிதியுதவிநல்கி முன்னுக்கு நிற்பார்.
1991.11.23இல் மணிமண்டபத்திற்கா அடிக்கல் இ.கி.மிசன் அப்போதைய தலைவர் சுவாமி ஆத்மகனானந்தா ஜீ மஹராஜ் அவர்களால் நடப்பட்டது. அதன்பின்பு பணிமன்றம் உசாராகசெயற்பட்டுவந்தகாலை தலைவர் டாக்டர் மா.பரசுரமன் அவர்கள் மரணித்தார். அதன்பிறகு மணிமண்டப நிரவாகசபை மாற்றியரைமக்கப்பட்டவேளை செயலாளராகவிருந்த திரு. வெ.ஜெயநாதன் அதிபர் தலைவராக செயலாளராக திரு.சி.தங்கவேல் மாமா தெரிவானார்கள்.
மணிமண்டப திறப்புவிழா 199.06.26 ஆம் திகதி நடைபெற்றது.அப்பொது ஸ்தாபஉறுப்பினர்களுள் ஒருவராகவிருந்த திரு.வி.ரி.சகாதேவராஜா அவர்களைக்கொண்டு வெளியான அடிகளார் நினைவாலய மலரிற்கு செய்லாளர் என்ற கோதாவில் தங்கவேல் மாமா எழுதிய ஒருகுறிப்பை இங்கு பதிவுசெய்யலாமென விளைகிறோம்.
சுமார் 1கோடி  ருபா செலவில் உண்டான இந்தக்கட்டடம் சுவாமி விபுலாநந்தரின் நினைவாலயமாக எம்மக்களின் கலைகலாசார வளர்ச்சியில் பங்குகொள்ளும் கலாசார நிலையமாக சைவமக்களின் சமயவளர்ச்சியில் தணைபுரிகின்ற சமயமன்றமாக பலவகை ஆத்மீகதுறவிகளின் ஆசிபெறும் புனிதஇடமாக சமுக மேம்பாட்டிற்கு  நிகழ்ச்சிகள் நடக்கின்ற பொதுமக்கள் மையமாக பிரகாசிக்கும் என்பதில் ஜயமில்லை என்று குறிபபிடடிருந்தார்.
ஆம் அவரது அந்த தீர்க்கதரிசனப்பார்வை உண்மையில் இன்று நிதர்சனமாகிவருகிது என்பதை நினைக்கின்றபோது நெஞ்சம் தாழாதிருக்கிறது.
‘விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை’ ‘கெட்டுப்போனவர்கள் விட்டுக்கொடுத்ததில்லை’ என்பார்கள். அதுபோல விட்டுக்கொடுத்து அனைவரையும் கட்டிஆள்வதில் அவருக்கு நிகர் அவரே.

இக்கட்டான காலகட்டத்தில் அவரது உயிர்பிரிந்தகாரணத்தினால் அவரது பூதவுடல்முன்னே நின்று ஆழுதுபுலம்பி சேவைகளை நினைவுகூரமுடியாமல் போனது நாம் செய்த துரதிஷ்டமே.
எனினும் அவர் மரணித்த அன்றே(5.7.2021)) அவருக்கு ஆத்மார்த்த பிரார்த்தனையும் இறுதி அஞ்சலி நிகழ்வும் எமது  பணிமன்றத்தின் ஏற்பாட்டில்  சுகாதாரமுறைப்படி மணிமண்டபத்தில்மன்றத்தின் உபதலைவர் சோ.ஸூரநுதன் தலைமையில்இ பணிமன்றத்தின் முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜாவின் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு மன்றச்செயலாளர் கு.ஜெயராஜியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ..
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
முன்னாள் தலைவர் ,சுவாமி விபலாநந்த ஞாபகார்த்த பணிமன்றம், காரைதீவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *