எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்காக யூரியா உள்ளிட்ட சில வகையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நேற்று (03) வெளியிட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரம் உடையவர்கள், யூரியா, கல்சியம் கார்பனேட் அல்லது இதர கனிமம் அற்ற உரங்கள், சூப்பர் பொஸ்பேற் மற்றும் நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பொஸ்பேற் ஆகிய இரண்டு அல்லது மூன்று மூலக்கூறுகளைக் கொண்ட நைட்ரேட் கலவைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரசாயன உரங்களின் இறக்குமதியை தடை செய்து வர்த்தமானி அறிவித்தலொன்று முதலில் வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது அதனை திருத்தி புதிய வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்| வெளியிட்டுள்ளார்.