100 பேருடன் நல்லூர் மஹோற்சவத்தை நடத்த அனுமதி

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் 100 பேருடன் ஆலய உள்வீதியில் நடத்தவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஆலய மஹோற்சவம் தொடர்பில் இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – நல்லூர் முருகன் ஆலய மஹோற்சவம் எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

யாழில் கொரோனா தொற்று நிலைமை தீவிரமாக காணப்படுவதன் காரணமாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின் படி 100 பேருடன் ஆலய உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *