பிரபல சின்னத்திரை நடிகை சௌந்தர்யா தனக்கு விரைவில் அறுவைச் சிகிச்சை நடைபெறவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் சௌந்தர்யா. இவர் நடித்த பகல் நிலவு சின்னத்திரை தொடர் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். மேலும் இவர் நடித்த குறும்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
6 மெழுகுவர்த்திகள் மற்றும் கொடிவீரன் போன்ற படங்களில் பாடியுள்ள அவர், கபாலி, மாஸ்டர், வணக்கம் டா மாப்ளே போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Advertisement
அதில், எனக்கு வருகிற சனிக்கிழமை இரவு வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. சரியாவதற்கு சில நாட்கள் ஆகும். எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். நன்றி என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் விரைவில் நலம் பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.