மூன்றரை வயது ஆண் குழந்தையை தாக்கி, உறங்கும் போது கழுத்தை நெறித்து கொலை செய்த சந்தேக நபர், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக மீகஹாதென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
21 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
வீட்டுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் இந்த நபர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட ஆண் குழந்தையின் தாய், கணவனை பிரிந்து, தற்கொலை செய்துக்கொண்ட நபருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த பெண் தனது 10 வயதான மகனை பாடசாலைக்கு அழைத்து சென்று விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் மூன்றரை வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட குழந்தை மற்றும் தற்கொலை செய்துக்கொண்ட நபர் ஆகியோரது உடல்கள் மீகஹாதென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.