
இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்டது கொரோனா உயிரிழப்பு
நாட்டில் மேலும் 82 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,727 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 318,755 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.