ஊதுபத்தி விற்கும் சிறுமிகள்-பின்னணியில் யார்?

இலங்கையில் அண்மைக்காலமாக சிறுவர்கள் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சியான சம்பவங்கள் இடம்பெறுள்ளது.

சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதும், சிறுவர்கள் பணிக்கமர்த்தப் படுவதும் வன்முறைகளுக்கு வழி வகுத்துவிட்டது.

மலையக சிறுமி இஷாலினியின் உயிரிழப்பிற்கு பின், சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தை தொழிளார்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன நிலையில், தற்போது ஹட்டன் பஸ்தரிப்பிடம் உள்ளிட்ட இடங்களில், ஊது பத்தி விற்பனையில ஈடுபட்டுள்ள சிறுமிகள் யார்? என்பது தொடர்பாகவும் இவர்களை இவ்வாறு செய்ய தூண்டும் நபர்கள் தொடர்பாகவும் ஆராய, விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்த அவர்,

ஹிஷாலினி பிரச்சினை மலையகம் , முழு இலங்கையையும் ஆட்டிப்படைத்து கொண்டு வருகின்றது.இந்நிலையில் தற்போது ஹட்டன் பஸ்தரிப்பிடத்தில், ஊதுபத்தி விற்கும் சிறுமிகள் தொடர்பில் அறியக்கிடைத்தோடு இவர்கள் விற்கும் ஊதுபத்திகள் அனைத்தும் ஒரே நிறுவனத்தின் பத்திகள் எனவும் முறைப்பாடு கிடைத்துள்ளது.

எனவே, இவர்கள் பின்புலத்தில் நின்று இவ்வாறு வீதிக்கு அனுப்பி விற்பனை செய்ய தூண்டுபவர்கள் தொடர்பிலும், குறித்த சிறுமிகள் தொடர்பிலும் முழு விபரங்களையும் ஆராய மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில்,
விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply