பிரதி அதிபரும், தவிசாளரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைப்பு

கிளிநொச்சி – முழங்காவில் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபரும் பூநகரி பிரதேச சபை உறுப்பினருமான சி.சிறிரஞ்சனை எதிர்வரும் 8 ஆம் திகதி, கிளிநொச்சி பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனையும், நாளை மறுதினம் (07) கிளிநொச்சி பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு பொலிஸாரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு 4 ஆம் மாடியிலும், கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் அலுவலகங்களுக்கு விசாரணைகளுக்காக அழைத்து நீண்டநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பச்சிலைப்பள்ளி சபை தவிசாளருக்கும் விசாரணைக்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply