இஷாலினி தீப்பற்றிய சம்பவம் சி.சி.டி.வி கமராவில் பதிவாகவில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த மலையச் சிறுமி தீப்பற்றி எரிந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஷாலினி என்ற மலையக சிறுமி கொழும்பிலுள்ள ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தொழில்புரிந்த நிலையில் கடந்த மாதம் உயிரிழந்திருந்தார்.

தீப்பற்றிய சந்தர்ப்பத்தில் அவர் ஓடிச்சென்று வீட்டு வளாகத்தில் இருந்த குளத்தில் பாய்ந்ததாக அந்தநேரம் வீட்டில் இருந்தவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

எனினும் அதனை உறுதிப்படுத்தும் அளவுக்கு சி.சி.டி.வி காணொளிகள் எதுவும் கிடைக்கவில்லை என தற்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிஷாட்டின் வீட்டில் 16 சி.சி.டி.வி கமராக்கள் இருக்கின்ற போதிலும், 14 கமராக்களே இயங்கு நிலையில் உள்ளன.

Leave a Reply