அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் ஆலை உரிமையாளர்களுக்கு புறம்பாக நெல்லை சேமித்து வைக்கும் மூன்றாம் தரப்புக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு தேவையான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு பதுக்கி வைக்கப்படும் நெல்லை அரசுடைமை ஆக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதற்கான சட்டமும் தயாரிக்கப்படவுள்ளது.
வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரவாத விலையை விட கூடுதலான விலைக்கு அரசியை விற்பனை செய்வோருக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணம் 25 ஆயிரம் ரூபா தொடக்கம் ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


