பெரும் அபாய கட்டத்தில் கொழும்பு; அச்சத்தில் மக்கள்; வெளியான பகீர் புகைப்படங்கள்

கொழும்பில் களுபோவில மருத்துவமையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள நோயாளிகளுக்கு வழங்குவதற்கு ஒட்சிசன் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் களுபோவில வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து தென்னிலைகையை சேர்ந்த திலக்ஷனி மதுவந்தி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

Advertisement

தனது தாயார் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலையில் சேர்க்க நீண்ட வரிசையில் இருந்ததாகவும், வரிசையில் காத்திருந்த போது இருவர் கண்முன்னே இறந்துவிட்டதாகவும், சிலர் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தியாவைப் பற்றி சொன்ன செய்திகளை இப்போது என் கண்களால் பார்க்கிறேன். களுபோவில வைத்தியசாலையின் கொவிட் வார்ட், வார்டில் ஒரு படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள் என்றும், வார்டில் உள்ள படுக்கைகளின் கீழ், மற்றவர்கள் உயிருக்கு போராடி, ஒக்ஸிஜனைப் பெறுகிறார்கள் எனவும், அதோடு தரையில் நோயாளிகள் நடக்க பயப்படுகிறார்கள்.

மீதமுள்ள அனைத்து (நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்) நீண்ட இருக்கைகளிலும் bench, நாற்காலிகள், மரங்களின் கீழ் படுத்திருக்கிறார்கள்.மணல் தரையில் ஒரு போர்வையுடனும் அதுவும் இல்லாமல் படுத்துள்ளதை காணமுடிகின்றது. குளிரிலும் நுளம்பு கடியிலும் , இந்த மக்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

எனினும் வைத்தியசாலையில் ஊழியர்கள் குறைவாகவே உள்ள நிலையிலும், அவர்கள் ஒரு கடவுளை போல கடினமாக நோயாளர்களுடன் போராடுகின்றனர். என் அம்மா இதுபோன்று கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்தபோது, ​​என் தந்தை ஒரு ஒக்ஸிஜன் இயந்திரத்திற்கு காத்திருந்தார்.

இந்த வாழ்க்கையில் பெரிய சந்தோசம் இல்லை. மேலும் உதவியற்ற நிலை. நாளை எனக்கும் தொற்று ஏற்படும். நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான். கொரோனாவை குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்களால் முடிந்தவரை கவனமாக இருங்கள்.

குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள் எனவும் திலக்ஷாணி மதுவந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *