சிறை கைதிகளுக்கு (சினோபார்ம்) தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இன்று (05) முதல் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளில் ஆரம்பமாவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, முதற்கட்டமாக வெலிகடை, மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
அத்துடன், நாட்டிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.