வெளிநாடுகளில் பாவனைக்குட்படுத்திய பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இலத்திரனியல் பொருட்கள், வாகனங்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் சிலவற்றின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி எஸ். கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கும், இயற்கைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் பாவனைக்குட்படுத்திய பொருட்களை கொண்டு வருவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.