‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியானது

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’.

இதில் சுராஜ், சௌபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

2019 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகள் கிடைத்தன.

இதற்கமைய, இந்தப் படத்தின் தமிழ் படைப்பு உரிமையைக் கைப்பற்றி கே.எஸ். ரவிகுமார் தயாரித்து, நடித்து வரும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முதல் பார்வையை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘கூகுள் குட்டப்பா’ படத்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

இதில் சுராஜ் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், சௌபின் கதாபாத்திரத்தில் தர்ஷன் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக லொஸ்லியாவும் நடித்துள்ளனர்.

அத்துடன் இந்தப் படத்தில் யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *