ஒமிக்ரான் திரிபு பரவல் உலகம் முழுவதும் மிகவும் வேகமாகப் பரவி வருகின்ற நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயற்படுவதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இத் தடுப்பூசியை செலுத்திய 6 மாதங்களின் பின்னரும் சிறந்த பாதுகாப்பாகவும் உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது வரைக்கும் 71 நாடுகளில் சுமார் 400 கோடி மக்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியும், பூஸ்டராக ஸ்புட்னிக் லைட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் ஒமிக்ரானுக்கு எதிராக இத் தடுப்பூசி சிறப்பாக செயற்படுகின்றது என அதிபர் புதினும பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமும் இதற்கு சார்பாக கருத்து தெருவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.






