யாழ்ப்பாணத்தில் கொஞ்சம் கண்ணை மூடினால் மக்களின் காணிகள், பாதுகாப்பு தரப்பினருக்கு தாரை வார்ப்பதற்கு பலர் தயார் நிலையில் உள்ளனர் என வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊடாக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில்,
நாட்டில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் ,பல ஆண்டுகளாக மக்களின் காணிகள் பாதுகாப்பு தரப்பின் பிடியில் காணப்பட்டது.
அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக காணிகள் விடுவிக்கப்பட்டன. தற்போது மீண்டும் காணி அபகரிப்புகள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக மக்களின் காணியாக இருந்தாலும்,அதன் பராமரிப்பு இன்றி காணப்பட்டால் உடனடியாக பாதுகாப்பு தரப்பினர் இது தமது காணியென அடையாள படுத்துகின்றனர்.
அதன் பின்னர் மக்கள்,மக்களின் பிரதிநிதிகள் இணைந்து காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்தி வருகின்றோம்.
இந்த நிலையில் தற்போது,பிரதேச செயலர்கள்,புதிய வழி ஒன்றை கையாண்டு வருகின்றனர்.
அரச காணி சுவீகரிப்பு தொடர்பில் உள்ள அறிக்கைகளை பயன்படுத்தி ,பிரிவு 38 இன் கீழ்,தனியார் காணிகளை அரசுடைமையாக்கி அதன் பின்னர் கடற் படையினருக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆகவே நாமும் இனி உடனே சென்று காணி அளவீடுகளை தடுப்பது கடினமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் சபையில் விவாதியுங்கள், இது தொடர்பில் விழிப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து சில நில அளவையாளர்கள் வருகை தந்து அளவீட்டு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விடயம் இங்குள்ள நில அளவை திணைக்கள அதிகாரிகளுக்கு கூட தெரியாது என தெரிவித்துள்ளனர்.






