ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள, லாப்ஸ் நிறுவனத்துக்கு எரிவாயு ஏற்றிவந்துள்ள கப்பலில் இருக்கும் எரிவாயுவில் ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் இரசாயனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த கப்பலிலுள்ள எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா அனுமதி வழங்கியுள்ளார்.
தேவையான தரநிலைகள் வரை உள்ளன. பல முறை ஆய்வுகளின் பின்னர், குறித்த எரிவாயுவை சந்தைக்கு விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
250,000 மெட்ரிக் தொன் எரிவாயு இந்த கப்பலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






