மூதூரிலும் எரிவாயு வெடிப்புச் சம்பவம்

மூதூர் – ஷாபி நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை (23) பகல் வேளையில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது.

வீட்டில் மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் வீட்டிலிருந்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு மூதூர் பொலிஸார் வருகை தந்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply