புகையிரத பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்

இன்று நள்ளிரவிலிருந்து புகையிரத பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை பொதிகளை பெற்றுக்கொள்ளும் பணிகளிலிருந்தும் விலகியுள்ளதாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளாா்.

புகையிரத பொது முகாமையாளருடன் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தமக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிலைய அதிபர்கள் சங்கம் முலம் தெரிவித்துள்ளது.

Leave a Reply