அச்சுவேலிக்கு திடீர் விஜயமான யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் அச்சுவேலி பகுதி மக்களினால் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டது.

இதனையடுத்து , யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்டார்.

குறித்த விஜயத்தின் போது அங்கே பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் பொதுமக்களால் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இன்றைய தினம் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திடீர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply