அடுத்த ஆண்டு நாட்டில் டொலர் பிரச்சினைக்கு தீர்வு – பந்துல

மக்களுக்கு நிவாரண விலையில் சதோசா ஊடாக அத்தியாவசிய பொருட்களை,வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தொற்று காரணமாக மட்டுமே பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சதோச மூலம் பொருட்களை விற்பனை செய்கின்றோம் .அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை நிவாரணத்தின் மூலம் வழங்கியுள்ளோம்.

போராட்டத்தில் மக்களை தள்ளுவது எமக்கு நோக்கம் இல்லை.

டொலர் பிரச்சனைகக்கு அடுத்த ஆண்டு முதல் தீர்வுக்கு கிடைக்கும்.. மத்திய வங்கி டொலர் பெற முடியும் என உறுதி அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு பொருளாதார பிரச்சனை நீங்கும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply