நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (22) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் 472 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 582,067 அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,832 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 301 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 558,527 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






