புத்தளம் மாவட்ட சர்வமத குழுவினரினரால் புத்தளத்தில் உள்ள அரச அலுவலங்களுக்கு முகக் கவசங்கள் (மாஸ்க்) இன்று வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது பாடசாலைகள், புத்தளம் பொலிஸ் நிலையம், கமநல சேவைகள் திணைக்களம், புத்தளம் பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்களுக்கு குறித்த முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் அரச அலுவலகங்களுக்கு இவ்வாறு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
புத்தளம் மாவட்ட சர்வமத குழுவின் இணைத் தலைவர்களான புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ வெங்கட சுந்தர ராமக் குருக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், இணைப்பாளர் உவைஸ் முஸ்னியா, பொருளாளர் ஏ.சி.எம்.ருமைஸ் ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து குறித்த முகக் கவசங்களை வழங்கி வைத்தனர்.






