யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரது தங்கமோதிரம் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டாம் திகதி மாணவி மயக்கம் அடைந்த நிலையில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மாணவி மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது அவரது கையிலிருந்த மோதிரம் காணாமல் போயுள்ள விடயம் தெரிய வந்துள்ளது.
Advertisement
இதனையடுத்து குறித்த மாணவி இந்த விடயத்தை வைத்தியசாலை நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தினார்.
வைத்தியசாலை நிர்வாகமானது இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.