பாடசாலை அதிபரொருவர் இலஞ்சம் பெறும்போது கையுமெய்யுமாக சிக்கிய சம்பவம் கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது.
தரம் 7ம் ஆண்டிற்கு மாணவர் ஒருவரை உள்வாங்குவதற்காக வியாபாரி ஒருவரிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் அதிபர் ஒருவரை, இன்று (23) கைது செய்துள்ளனர்.
இதனை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கம்பஹா பிரதேசத்திலுள்ள உயர் பாடசாலையொன்றின் அதிபரே, பாடசாலையின் அதிபர் காரியாலயத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் தெரியவருகையில்,
தனது மகளை பாடசாலைக்கு உள்ளீர்ப்பதற்காக அதிபர் இரண்டு இலட்சம் ரூபாயை இலஞ்சமாகக் கோருவதாக நபரொருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், பாடசாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது அதிபர் குறித்த நபரிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெறும்போது அதிபரை கையுமெய்யுமாக கைதுசெய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா? ஜனவரி 3 இல் அரசு இறுதித் தீர்மானம்






