தண்டனைக்குரிய குற்றத்தை இழைக்கும் விவசாயிகள்! நாலக கொடஹேவா

அரசாங்கம் இலவசமாக வழங்கிய உரத்தை வீசி விவசாயிகள் தண்டனைக்குரிய குற்றத்தை இழைப்பதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக இன்று (23) முற்பகல் மஹரகம வித்தியாலய சந்தியில் நடைபாதை மற்றும் வடிகாண் அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

திரவ உரம் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்து விவசாயிகள் அவற்றை தூக்கி எறிவதை நான் கண்டேன்.

மிருகங்களுடன் தொடர்புடையவற்றை கொண்டே பெரும்பாலும் திரவ உரம் தயாரிக்கப்படுகிறது.

ஆகவே அது துர்நாற்றம் வீசும். வாசனை திரவியங்களை கொண்டு உரம் தயாரிக்கப்பட மாட்டாது.

வாசனை திரவியம் வேண்டுமாயின் அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.

விவசாயிகள் வீசுவது நாட்டு மக்களின் பணம் எனவும் அவ்வாறு செய்வது தேசிய குற்றம் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply