கொழும்பு வளிமண்டலத்தில் அதிகரித்த தூசித் துகள்கள்

கொழும்பை சூழவுள்ள வளிமண்டலத்தில் தூசித் துகள்கள் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் பிரிவின் மூத்த விஞ்ஞானிசரத் பிரேமசிறி தெரிவித்துள்ளாா்.

இந்த நிலை இன்னும் நான்கு நாட்களுக்கு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளாா்.

இந்த நாட்களில் தீவு முழுவதும் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதாகவும் வட இந்தியாவின் வடபகுதியில் இருந்து வறண்ட காற்று வீசுவதாகவும் இந்த காற்றில் நீராவி இல்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

வானம் மேகமூட்டம் குறைவாகவும், வெப்பம் அதிகமாகவும் காணப்படுவதாக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மழை குறைந்ததால் காலையில் குளிர் நிலவும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, இன்று காலையிலும் கொழும்பின் சுற்றுச்சூழலில் தூசு, துகள்களை அவதானிக்க கூடியதாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply