யாழ். பல்கலையில் ஒளிவிழா!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று பிற்பகல், பல்கலைக்கழக வளாகத்தில் ஒளிவிழா முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சம்பிரதாயபூர்வமாக அமைக்கப்பட்ட பாலம் குடிலில் மாணவர்களால் பாலன் வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கீர்த்தனைகளோடு நற்செய்தியும் வாசிக்கப்பட்டது.

ஒவ்வொரு பீட மாணவர்களாலும் கலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து நத்தார் ஊர்வலம் பல்கலைக்கழகத்தினை சூழ இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அனைத்து பீடத்தின் சார்பிலும் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply