அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள சங்கத்தின் மத்தியக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனது கோரிக்கைகளுக்கு, சுகாதார அமைச்சு கடிதம் மூலம் தீர்வு யோசனையை அனுப்பியுள்ளதாக அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆராயந்து, தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.






