எந்தக் காரணங்களுக்காகவும் பாடசாலைகளை மூடாதீர்கள்! ரஞ்சித் மல்கம் ஆண்டகை

எக்காரணம் கொண்டும் பாடசாலைகளை மீள மூட வேண்டாம். அவ்வாறு நிகழ்ந்தால் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகலாம் என பேராயர் கர்தினால் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கணனி மூலமாக மாணவர்கள் கற்றல் நடவடிக்கைளை முன்னெடுப்பதால் தவறான வழிகளுக்கு மட்டுமன்றி, துஸ்பிரயோகங்களுக்கும் உள்ளாக நேரிடும்.

நிகழ்தகை கற்றல் ஊடாக சில மாணவர்களின் வாழ்க்கை தீவிரமான முறையில் பாதிப்புக்கு உள்ளானது. எதிர்காலத்தில் எக்காரணத்துக்காகவும் பாடசாலைகளை மூடி வைக்க வேண்டாம் என்றே, கல்வி அமைச்சிடமும் கல்வித் துறைக்குப் பொறுப்பான அதிகாரிகளிடமும் நாமும் கோரிக்கை விடுக்கின்றோம்.

பரீட்சைகளில் மாணவர்கள் சித்தியடைய வேண்டும் என்றே பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். பிரத்தியேக வகுப்புகளுக்கு மாணவர்களை அனுப்புவதால் மட்டும் மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடைந்துவிட போவதில்லை.

சிலர் சிறந்த சித்திகளை பெற முடியும். எதிர்காலத்தில் முகங்கொடுக்கக் கூடிய சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பலமிக்க மாணவர்களை பாடசாலைகளே உருவாக்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply