யாழ். பல்கலை மாணவர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது திருவம்பாவை பாராயணம்!

கடந்த வருடம், யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட திருவம்பாவை பாராயணம் இந்த வருடமும் சிறப்பாக இடம்பெற்று நிறைவுக்கு வந்துள்ளது.

மாணவர்களின் முயற்சியினால் கடந்த வருடம் திருவம்பாவை பாராயணம் முன்னெடுக்கபட்டிருந்தது, இந்த வருடமும் 10 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட திருவம்பாவை பாராயணத்தின், இறுதி நாள் நிகழ்வுகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

அதிகாலை மாணவர்கள், மாணிக்கவாசகரின் திருவுருவ சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து தேவார பதிகங்களை பக்தி பூர்வமாக இசைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதி முடக்கம்: அமைச்சர் டக்ளசின் காலில் விழுந்து அழும் மக்கள்!

Leave a Reply