படகிலிருந்து வாளை தூக்கி காட்டும் இந்திய மீன்வர்கள்! யாழ் மீனவர்கள் ஆதங்கம்

வடக்கு கடல் பரப்புக்களில் இந்திய மீன்வர்களின் அத்துமீறலை கண்டித்தும், இதற்கான உரிய தீர்வை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்:

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் படகிலிருந்து வாளை தூக்கி காட்டுகிறார்கள். இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படக்கூடாது.

எங்கள் வளம் சூறையாடப்பட்டுள்ளது. தமிழக இராமேஸ்வர மீனவர்கள் எங்கள் மீது பொய் குற்றம் சுமத்துகின்றனர். அரசு தீர்வை தரும் வரை போராட்டம் தொடரும்.

பணம் படைத்தவர்களின் ரோலர் படகுகளே எமது கடல் பரப்பில் திரிகிறது. நாம் இந்தியாவுடன் சண்டை போடவில்லை. அவர்கள் எமது அகதிகளுக்கு செய்த உதவிகளையும் நாம் மறக்கவில்லை.

இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில்:

அத்துமீறிய மீன்பிடி கண்டிக்க கூடியது. நான் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் இது பற்றி பேசுகின்றேன். உங்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.

போராட்டத்தை கைவிடுங்கள். இவ்வாறு அத்துமீறும் படகுகளை அரசுடைமையாக்குவதற்கு என்ன வழிகள் என்று ஆராய்வோம் என தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் உறுதியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

[embedded content]

Leave a Reply